Tuesday, October 4, 2022

ஆந்திர/தெலுங்கானா பயணக்கதைகள் - நாள் 3

பெரிய இரண்டாம் நாளின் களைப்புக்களுக்கிடையே, அடுத்த நாளை ராமோஜி பிலிம் சிட்டியில் செலவழிப்போம் என்று முடிவு செய்தோம். பல வீடியோக்கள், blog-கள், காலை 9 மணிக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் ஆளாக சென்றால் தான், வரவேற்பு நடனம் பார்க்க முடியும், முழுவதுமாக சுற்றிப்பார்க்க முடியும் என்று ஆலோசனைகள் சொன்னதால், அதன்படியே காலை 7:30 மணிக்கு நாங்கள் தங்கி இருக்கும் Oyo ஹோட்டலை விட்டு கிளம்ப முடிவு செய்து இரண்டாவது நாளை முடித்துக்கொண்டோம். 

திட்டப்படியே மூன்றாவது நாளை காலை 7:30 மணிக்கெல்லாம் தொடங்கினோம். தொடர் விடுமுறை என்பதால், ஹைதராபாத்தை விட்டு வெளியே செல்லும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. காலையே கிளம்பியதால், பெரிய டராபிக் நெரிசல் இல்லை.

8:15 மணிக்கெல்லாம் ஹைதராபாத்திலிருந்து ராமோஜி பிலிம் சிட்டியை இணைக்கும் சாலையிலிருந்த ஹோட்டலில் காலை உணவுக்காக காரை நிறுத்தினோம். ஹைதராபாத்திலிருந்து வெளியே வந்து, ராமோஜி பிலிம் சிட்டியை இணைக்கும் சாலையில் இருந்த நல்ல உணவகங்களுள் நாங்கள் சாப்பிட்ட சம்பூர்ணா உணவகமும் ஒன்று. ராமோஜி பிலிம் சிட்டிக்கு அருகில் இந்த உணவகம் இருந்ததால், கூட்டம் அதிகமாகவே இருந்தது. சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு, கிடைத்த இருக்கையில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். நேரம் ஆக ஆக உணவகத்தில், அதை ஒட்டிய சாலையிலும் கூட்டம் கூடிக்கொன்டே இருந்தது. 

Sampoorna Restaurant Location : https://goo.gl/maps/vcQGLF9wCi1LsB6L6

சம்பூர்ணா உணவகத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் ராமோஜி பிலிம் சிட்டியின் பெரிய நுழைவு வாயில் தென்பட்டது. எங்களுக்கும் முன்பாகவே 30 வண்டிகள் வந்து இருந்தன. கார் நிறுத்திமிடத்தில் வண்டியைப் போட்டுவிட்டு, டிக்கெட் எடுக்குமிடத்திற்க்கு சென்றோம். கணிசமான கூட்டம் இருந்தது. வெவ்வேறு விதமான டிக்கெட்டுகள் இருந்தன. நாங்கள் எடுத்த 1400 ரூபாய் டிக்கெட்டுற்க்கு நீங்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரை ராமோஜி பிலிம் சிட்டியில் சுத்தலாம், அங்கே இருக்கும் பல்வேறு வகையான சினிமா அரங்கங்களை பார்ககலாம். ஒவ்வொரு அரங்கத்திலிருந்தும் இன்னொரு அரங்கித்திற்கு செல்வதற்கு ராமோஜி பிலிம் சிட்டியின் சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது. 

2500 ரூபாய் டிக்கெட்டுகளும் இருந்தது. இந்த டிக்கெட்டில் நீங்கள் குளிர்யூட்டப்பட்ட பேருந்தில் சொகுசாக பயணிக்கலாம். உங்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதிலிருந்து, ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, மறுபடியும் ஏற்றிகொண்டு இன்னொரு இடத்தில் இறக்கிவிடும் வேலை முதற்கொண்டு அனைத்தையும் அவர்கள் பார்த்துக்கொள்வர்.

ராமோஜி பிலிம் சிட்டி:

பல அடுக்குகளைக் கொண்ட மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள சினிமா தொடர்பான அனைத்துவித படப்பிடிப்புகளும் நடக்கும் ஒரு இடம். ஒரு இடத்தில் அரண்மனைகள், கோவில்கள் சார்ந்த செட்கள் இருக்கும், இன்னொரு இடத்தில் ஒரு சாதாரணத் தெரு, அதைச் சார்ந்து உள்ள டீக்கடை, மற்ற கடைகள் கொண்ட செட் இருக்கும், மேலைநாடுகளைப் பிரதிபலிக்கும் செட்டும் இருக்கும், விமான நிலையச் செட், மகாபாரத செட், ரெயில் நிலையச் செட், பாகுபலிச் செட் என பல செட்டுகள் பல அடுக்குகளில் தொலைவுகளில் அமைந்து இருக்கும். ஒவ்வொரு செட்டுக்குமான இடைவெளி சில கிலோமீட்டர் தொலைவுகள் இருந்தது. ஒவ்வொரு செட்டுக்கும் ஒரு பொதுவான இடம் இருக்கும். அந்த இடத்திலிருந்து பார்க்க வரும் மக்களை ராமோஜி பிலிம் சிட்டியின் பேருந்துகள் இறக்கி விட்டும், ஏற்றிக்கொண்டும் அடுத்த செட்டுக்கு கொண்டு போய் உங்களை இறக்கி விடும். பேருந்துகள் நிமிட இடைவெளியில் வந்துக்கொன்டே இருக்கும். 

டிக்கெட் வாங்கி கொண்டு உடனடியாக உள்ள நுழைந்தோம். வரிசையாக பேருந்துகள் காத்துகொண்டு இருந்தன. பேருந்துகள் நிரம்பியவுடன் ஒவ்வொன்றாக கிளம்ப ஆரம்பித்தன. டிக்கெட் கொடுக்குமிடத்திலிருந்து ஒரு அரைமணி நேரம் பேருந்தில் பயணம் ராமோஜி பிலிம் சிட்டியின் முதல் அரங்கிற்கு அதாவது மைய அரங்கிற்கு செல்ல வேண்டும். முதலாவதாக மக்கள் வந்து இறங்குமிடமும் இது தான். அனைத்தும் சுற்றி பார்த்தப் பிறகு, வாகன நிறுத்துமிடத்திற்கு பேருந்து ஏறுவதும் இங்கு தான். மணிக்கெல்லாம் நாங்கள் மைய அரங்கிற்கு வந்து விட்டோம். மணி அளவில் மட்டுமே அரங்கின் நுழைவு வாயில் நடனத்தோடு திறக்கப்படும். அதுவரையில் அங்கே இருக்கும் பொழுது போக்கு விளையாட்டுகளில் விளையாடச்  சென்றோம். டிகிரியில் சுத்தி வரும் , ஏடாகூடமாக சுற்றி வரும் இன்னொரு பொழுதுபோக்கு , ராட்டினம், பச்சை குத்துதல், பார்த்து படம் வரைதல், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் என மணி நேரம் பொழுதுப்போக்குவதற்கான விளையாட்டு அம்சங்கள் அங்கு இருந்தன. ஒரு அரை மணி நேரம் விளையாடி விட்டு போவதற்கும், வரவேற்பு நடனம் ஆரம்பிப்பதற்க்கும் சரியாக இருந்தது. 

வரவேற்பு நடனம் முடிந்ததும் கூட்டமாக உள்ள சென்றோம். அடுத்த நாள் சுதந்திரதினம் என்பதால், மற்றுமொரு நடனமும் நடந்தது. எப்படியும் ஒரு பேர் இந்த நடனங்களை பார்த்துக்கொண்டு இருந்தோம். இன்னும் மக்கள் வந்து கொண்டே இருந்தனர். நடனங்கள் முடிந்ததும், அரங்குகள் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். (எப்படி ஒரு சினிமா எடுக்கிறார்கள் என்பதை பற்றிய நிகழ்ச்சி, நாம் நடிக்கும் சில சீன்கள் உடனே படமாக மாறி வருகிறது), விண்வெளி பற்றிய நிகழ்ச்சி, ஹாலிவுட் படங்களின் சில சீன்களை பிரதிபலிக்கும் சிறிய பொம்மைகள் நிறைந்த அரங்கிற்குள் சுற்றுலா, சண்டை காட்சிகள் படமாகும் விதம் என பலதரப்பட்ட அரங்குகள் இங்கே இருந்தன. ஒவ்வொரு அரங்கிற்கும் செல்ல குறைந்தபட்சம் அரைமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். வரிசையில் நிற்பது, நிகழ்ச்சிகளை பார்ப்பது என இரண்டு மணி நேரம் இங்கே செலவிட்டோம். இன்னுமும் இங்கே இருந்தால், மற்ற அரங்குகளை பார்க்க இயலாது என்று எண்ணி, வேறு அரங்கிற்கு செல்ல மைய அரங்கின் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றோம். 

பேருந்து நிரம்பியவுடன், நம்முடன் ராமோஜி பிலிம் சிட்டியை சார்ந்த ஒரு வழிகாட்டியும் பேருந்தில் ஏறிக்கொள்கிறார். அடுத்த நிமிடங்களுக்கு நாங்கள் பல்வேறு சினிமாக்களில் வந்த தோட்டங்களை பார்த்தோம். பேருந்து சென்று கொண்டே இருக்க, வழிகாட்டி ஒன்னு ஒன்னாக விளக்கி கொண்டே வந்தார். சூர்ய வம்சத்தில் பாடல்களில் வரும் தோட்டங்களை பார்த்த மாத்திரத்திலேயே கண்டுகொள்ள முடிந்தது. அடுத்து கோயில்கள் அமைந்த இடத்தை பேருந்தில் சுற்றி வந்தோம். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், ஷாருக் தீபிகா படுகோனை தூக்கி கொண்டு செல்லும் கோவில், தமிழ் படங்களில் காட்டப்படும் கோவில்கள் என நெறைய இருந்தன. அடுத்த சுற்றிப்பார்த்த இடம், கும்பலாக வீடுகளும், அதை ஒட்டிய மார்க்கெட் போன்ற இடங்களும். இதை நாம் பாட்ஷா, மகதீரா, நெறைய தெலுங்கு படங்களில் பார்த்து இருப்போம். இவை எல்லாவற்றையும் பேருந்தில் இருந்தபடியே பார்த்துக்கொண்டு சென்றோம். வழிகாட்டியும் விளக்கிக்கொண்டு வந்தார். 

கடைசியாக பேருந்தில் இருந்து ஒரு இடத்தில் வெளிநாடுகளாக காட்டப்படும் தெருக்கள், மருத்துவமனைகள் செட்கள், ஏர்போர்ட் செட்கள் இருந்தன. அவற்றை நாங்கள் நடத்தவே சுற்றி பார்த்தோம். தேவையான அளவிற்கு போட்டோக்களை எடுத்து கொண்டோம். ஒவ்வொரு சேட்டும் போலி என்று சொல்லமுடியாத அளவிற்கு அவ்வளவு தத்துரூபமாக இருந்தது. இத்தனை நாள், வெளிநாடு வெளிநாடு என்று நாம் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று புரிந்தது. ஏர்போர்ட் சேட்டும் அப்படி தான். விமான டிக்கெட் வழங்குமிடம், காத்திருப்பு அறை, விமானம் போன்ற மாதிரிகள் இருந்தன. நீங்கள் விமானம் உள்ளே இருப்பது போல பலவித காட்சிகள் இங்கே எடுக்கலாம். விமான நிலைய செட்டை சுற்றி பார்த்த பிறகு மறுபடியும் வரிசையில் நின்றோம் அடுத்த இடத்திற்கு செல்ல பேருந்து ஏற.

No comments:

Post a Comment