2019 முதல் நாம் படித்த புத்தகத்திற்கு விமர்சனம் போடலாம் என்று ஒரு உத்தேசம். இவன் என்ன பெரிய இவனா, புத்தகத்திற்கு விமர்சனம் போட என்று இதை படிக்கும்போது உங்களுக்கு தோன்றலாம். எனக்கும் அதே இஷ்க் இஷ்க் என்று தான் தோனியது. ஒன்றுமில்லை, இந்த விமர்சனம் படித்து விட்டு, என் வாசிப்பு நடையுடன் ஒத்துப்போகும் சில அறிய நண்பர்களை அறிந்து, அவர்களின் பரிந்துரைகளை வைத்து வாசிப்பு பழக்கத்தை மேலும் தொடர ஒரு அவா. அப்புறம் வலைப்பதிவு எழுதும் என் கடந்தகால பொழுதுபோக்கையும் புதுப்பிக்கவும் ஒரு ஆசை. கடைசியா 2013ல எழுதுனதுங்க. :( அவ்வளவு தாங்க!
ஆசிரியர்: க.சுதாகர்
பதிப்பகம்: வம்சி
விலை: 100
புத்தகம் அறிமுகமானது எப்படி:
இந்த எழுத்தாளர் சுதாகரின் முதல் நூல் 6174 செக்க போடு போட்டது. அருமையான அறிவியல் புனைகதை. இன்றும் எனக்கு பிடித்த நாவல்களுள் அதுவும் ஒன்று. அவரின் அடுத்த நாவலான 7.83 ஹெர்ட்ஸ்-ம் விறு விறு நடையுடன் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைக்கதையே. இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என் நண்பன் சபீர் ஜாவித் தான். சரி, இவரின் எழுத்து நடை பிடித்துப்போனதால் இவரின் அடுத்த நூல்களை படிக்கும் ஆர்வமும் அதிகமானது. ஆனால், சபீர் அப்பவே சொன்னான். கொஞ்சம் இழுவை மாதிரி ன்னு பேசிக்கிட்டாங்க. பார்த்து எடு ன்னு. சரி எடுத்து தான் பாப்போம் ன்னு எடுத்தேன் 2019 புத்தக கண்காட்சியில். வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம்.
விமர்சனம்:
ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஒலி இருக்கும்.
1). சில புத்தகங்கள், "டேய், விட்டுறாத டா தம்பி" ன்னு தனுஷ் குரலில் சொல்லி சொல்லி, ஒரே மூச்சில் நம்மை படிக்க வைத்து விட்டு விடும்.
2). சில
புத்தகங்கள், "பாஸ், ஒன்னும் பிரச்சனை இல்ல, கொஞ்சம் வெச்சு வெச்சு செஞ்சாலும், வீட்டுக்கு மட்டும் அனுப்பிருங்க பாஸ்" ன்னு வடிவேல் குரலில் சொல்லி, தினமும் படிக்க வைத்து முடித்து வைத்துரும்.
3). கடைசியா சில புத்தகங்கள் இருக்கு, தொறந்தாலே காஞ்சனா படத்துல இருட்டுல யாரோ அழுகிற மாதிரி கேக்கும்ல, அதே மாதிரி. "வாயேன் டா, வந்து படி டா" ன்னு அழுதுட்டே கூப்டுற மாதிரி இருக்கும், படிக்கவும் கொஞ்சம் சலிப்பாக இருக்கும். இந்த நிறக்குருடு அதுல மூணாவது வகைங்க.
அந்த அற்புத அறிவியல் புனைகதைகளை எழுதிய ஆசிரியரின் புத்தகமா இது ன்னு யோசிக்க வைத்த ஒரு புத்தகம். சரி டா, அப்படி என்ன தான் புத்தகத்துல இருக்கு ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்காமல் இல்லை மக்களே.
நாம பள்ளி படிக்கும் போது(நாம ன்னா 90's கிட்ஸ் ங்க), தமிழ் படத்துல நற்றிணை, குறுந்தொகை ன்னு சில சங்க கால பாடல்களும், அதுக்கு விளக்கமும் கொடுத்து இருப்பாங்க. இந்த தலைவன் தலைவியை காணாது ன்னு சொல்வாங்கல. அதே தாங்க. அதோட பெரிய விரிவாக்கம் தாங்க இந்த நிறக்குருடு.
ஆசிரியர், தான் சந்தித்த இந்த உலக மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கை கதைகளையும், சங்க கால இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி பேசுகிறார். எனக்கு எப்பவும் இந்த சங்க இலக்கியங்கள் படிப்பவர்களை கண்டாலே வியப்பாக இருக்கும். அதை அவர்கள் பொறுமையாக படிக்கும் விதமும், அதை தொடர்பு படுத்திக்கொள்ளும் விதமும் ஆச்சிரியம் தரும். அதே ஆச்சிரியம் தான் இந்த புத்தகம் படிக்கும் போதும். ஒவ்வொரு பாடலுக்கும், ஆசிரியர் அதை நிகழ்கால நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் விதமும் அருமையோ அருமை. ஆசிரியர் ஒரு கதையில் சொல்லி இருப்பார். நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒவ்வொரு சங்ககால பாடல் இருக்கிறது. அதை அவர் கோடிட்டும் காட்டி இருப்பார் ஒவ்வொரு கதையிலும். ஆனால், புத்தகம் முழுவதும் ஒரு மெல்லிய சோக இழைய ஊஞ்சலாடியது. எல்லா கதைகளும், ஒரு சோக நிகழ்கால முடிவோடு, சங்ககால பாடலோடு தொடர்பு படுத்தப்பட்டிருந்து. ஆனால், புத்தகம் உங்களுக்கு படித்து முடித்தவுடன் எந்த ஒரு தாக்கத்தையும் தராது.
உங்களுக்கு எந்த புத்தகமும் படிக்க இல்லாமல், இந்த ஒரு புத்தகம் தான் படிக்க இருக்கிறதென்றால், இந்த புத்தகத்தை எடுப்பதில் தவறேதுமில்லை. கொஞ்சம் பொறுமையாக,இல்ல ரொம்ப பொறுமையாக கையாள வேண்டிய புத்தகம் இது.
அட, என்னடா இது நிறக்குருடு ன்னு கேக்குறீங்களா, நிறங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிய இயலாது போல், மனிதர்களும் சில வேறுபாடுகளை அறிய இயலாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் புத்தகம் உணர்த்தும் சேதி.
அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.
அன்புடன்
-பிரபு கந்தசாமி
நிறக்குருடு

மனிதரில் எத்தனை நிறங்கள்..புத்தகங்களை வாசிப்பது நல்ல செயல்.அதை தொடர்ந்து செய்..
ReplyDeleteநன்றி அண்ணா. கண்டிப்பாக தொடர்ந்து வாசிக்கிறேன். 🙂
Deleteஅருமை. வாழ்த்துக்கள்! தொடர்ந்து செய்க.
ReplyDeleteநன்றி அண்ணா. :)
Delete