ஆலம் என்ற மான்டெசொரி கல்வி பள்ளிக்கு நான் எழுதிய பாடல் வரிகள்!!
ஓவியம் வரைந்திட ஆசைகள் இருக்கு
பாடி பறந்திட இறக்கைகள்
இருக்கு,
அன்றாட வேலைகளில் ஆர்வம் இருக்கு,
இவை எல்லாம் செய்திட இடம் எங்கே இருக்கு?
அவை எல்லாம் செய்திட இடம் இங்கே இருக்கு,
ஆலம் என்பதே அதன் பெயராய் இருக்கு.
நண்பர்களாய் ஆசிரியர்கள் இருந்திடவே,
அனுபவ கல்வியைக் கற்றிடலாம்,
அதை வைத்தே வாழ்வை வாழ்ந்திடலாம்,
இவை எல்லாம் கிடைத்திடவே
ஆலம் பள்ளியில் படித்திடுவோம்
ஓடும் நதியாய் பாய்ந்திடவே,
வீசும் காற்றாய் பறந்திடவே,
கடலாழம் முத்தாய் மாறிடவே,
இருக்கே ஒரு அழகிய தோட்டம்!
பிடித்ததையெல்லாம் படித்திடுவோம்
நினைத்ததையெல்லாம் செய்திடுவோம்,
மீனாய் மாறி நீந்திடுவோம்,
பறவையாய் பாடித் திரிந்திடுவோம்,
ஆராய்ச்சிகள் பலவே செய்திடுவோம்,
அனைவரும் ஒன்றாய் இங்கே கற்றறிவோம்.
சிரிக்கும் மலர்களே இங்குண்டு,
வாடாமல் பார்த்திட பலருண்டு,
தினமும் பலதாய் செயலுண்டு,
அதை செய்திடவே எங்களுக்கு ஆர்வமுண்டு!
வேடிக்கையாய் கற்றலில் வலம் வருவோம்,
செய்முறையில் நித்தமும் பகுத்தறிவோம்,
அந்த நிலவையும் எட்டித் தொடுவோம்.
நன்று
ReplyDeleteSuper
ReplyDeleteNice...
ReplyDelete